அவுஸ்திரேலிய அணியில் முதல் அரைசதம் விளாசிய இந்திய வீராங்கனை! ஆட்டநாயகி விருதுபெற்று மிரட்டல்
10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:44 | பார்வைகள் : 198
மகளிர் BBL டி20யில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் முதல் அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருது பெற்றார்.
மகளிர் BBL டி20யில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் முதல் அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருது பெற்றார்.
பிரிஸ்பேனின் காப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வுமன் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் வுமன் அணிகள் மோதின.
பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் துடுப்பாடியது. 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை அணி இழந்தபோது, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) களமிறங்கினார்.
அதிரடியில் மிரட்டிய அவர் தனது முதல் BBL சதத்தை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் 40 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக பிரிட்ஜெட் பாட்டர்சன் 61 (47) ஓட்டங்களும், மாடெலின் பென்னா 59 (30) ஓட்டங்களும் எடுத்தனர்.
அரைசதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டநாயகி விருது பெற்றார்.