பாகிஸ்தானின் திடீரென அமுலாக்கப்பட்ட ஊரடங்கு
11 கார்த்திகை 2024 திங்கள் 08:09 | பார்வைகள் : 1004
பாகிஸ்தானின் பஞ்சாபில் காற்றின் தர மாசுப்பாடு காரணமாக புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகியுள்ளதால் கட்டாய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்து நகரம் புகைமூட்டமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனவே நவம்பர் 17ம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.