Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் முதல் தடவையாக நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல்!

கனடாவில் முதல் தடவையாக நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல்!

11 கார்த்திகை 2024 திங்கள் 09:41 | பார்வைகள் : 356


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ப்ரேசர்வெளி பகுதியில் இளைஞர் ஒருவருக்கு இவ்வாறு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.

கனடாவில் முதல் தடவையாக இவ்வாறு பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் பரவியமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர், பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண வைத்தியசாலை ஒன்றில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொதுவாக பறவை காய்ச்சல் நோயினால் பறவைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் இந்த நோய் தொற்று மனிதர்களையும் தாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் குறித்த இளைஞருக்கு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டு இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று எவ்வாறு குறித்த இளைஞருக்கு தொற்றியது என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்