Paristamil Navigation Paristamil advert login

கிழக்கு கியூபாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிழக்கு கியூபாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

11 கார்த்திகை 2024 திங்கள் 09:51 | பார்வைகள் : 479


கிழக்கு கியூபாவில் நேற்று (10) 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாண்டியாகோ டி கியூபா, ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ போன்ற பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர் ஊடகங்களும் அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தின் மையம், கியூபாவின் பார்டோலோம் மாசோவில் இருந்து 25 மைல் (40 கிலோமீட்டர்) தெற்கே அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாகப் பெரிய சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவைக் கடுமையாகத் தாக்கியதில், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவைத் தாக்கியுள்ளது. அதேவேளை ஒக்டோபர் மாத இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்