சிக்ஸர் மழை! 75 பந்தில் 150 ரன்..வரலாறு படைத்த வீராங்கனை
11 கார்த்திகை 2024 திங்கள் 10:42 | பார்வைகள் : 6480
மகளிர் பிக்பாஷ் டி20 போட்டியில் லிஸில்லே லீ 150 ஓட்டங்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.
சிட்னியில் நடந்த WBBL போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 3 விக்கெட்டுக்கு 203 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய லிஸில்லே லீ (Lizelle Lee) 51 பந்துகளில் சதம் விளாசினார்.
அதனைத் தொடர்ந்து மேலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட லீ, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 பந்துகளில் 12 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் WBBL வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை எனும் சாதனையை படைத்தார்.
பின்னர் ஆடிய பெர்த் ஸ்கார்சார்ஸ் அணி 131 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஐன்ஸ்வொர்த் 41 (27) ஓட்டங்கள் எடுத்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan