உலகின் கவர்ச்சியான வீராங்கனை எனும் ஜேர்மனி பெண்ணின் அறிவிப்பு
12 கார்த்திகை 2024 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 510
பாரிஸ் ஒலிம்பிக் ஏமாற்றத்திற்கு பிறகு, ஜேர்மனி தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் 800 மீற்றர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
ஜேர்மனியின் 26 வயது தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் (Alica Schmit). உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனை என்று அழைக்கப்படும் இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் 4x400 மீற்றர் ரிலே ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார்.
ஆனால், ஜேர்மனி இரண்டு போட்டிகளில் வெளியேறியது. இதனை 'ஒரு உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர்' என்று பின்னர் அலிகா விவரித்தார்.
இந்த நிலையில் அலிகா தனிப்பட்ட 800 மீற்றர் ஓட்டத்தில் போட்டியிடப் பயிற்சி எடுப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது பதிவில், "ரோமில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு, பெண்களுக்கான 4x400 மீற்றர் ஓட்டத்தில் ஜேர்மனி நாட்டினருக்குத் தகுதி பெற்றோம். பாரிஸுக்கு பிறகு நான் புதிதாக ஒன்றை முயற்சித்தேன் மற்றும் 800 மீற்றர் மற்றும் 600 மீற்றர் ஓட்டத்தில் பங்கேற்றேன்.
800 மீற்றர் ஓட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அதனால் அடுத்த ஆண்டு அதற்காக என் முதல் உயர் பயிற்சி முகாமிற்கு செல்கிறேன். இந்த புதிய சவாலுக்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த பயணம் தொடங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் இத்தாலியிடம் தோல்வியடைந்த பின்னர், 2028யில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை அலிகா எதிர்பார்க்கிறார்.