Paristamil Navigation Paristamil advert login

ஜப்பான் பிரதமராக Shigeru Ishiba  தெரிவு

ஜப்பான் பிரதமராக Shigeru Ishiba  தெரிவு

12 கார்த்திகை 2024 செவ்வாய் 11:14 | பார்வைகள் : 465


ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஒக்டோபர் 27-ம் திகதி நடைபெற்றது.


இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா (Shigeru Ishiba) மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த திங்களன்று, ஜப்பானின் நாடாளுமன்றம் அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்தது.

இந்த தேர்தலில் இஷிபாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party) பெரும்பான்மையை இழந்தது.

தாராளவாத ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் 191 இடங்களை மட்டுமே பெற்று 65 இடங்களை இழந்தது. கடந்த 15 ஆண்டுகளில் கட்சியின் மிக மோசமான செயல்பாடு இதுவாகும்.

நவம்பர் 11 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. 

மற்ற கட்சிகளின் ஆதரவுடன் இஷிபா பிரதான எதிர்க்கட்சித் தலைவர் யோஷிஹிகோ நோடாவை 221-160 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆனால், 465 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை.

ஒக்டோபரில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் இஷிபா பதவி விலக மறுத்துவிட்டார். 

இஷிபா மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்வந்திருந்தார். புதிய அரசாங்கத்தில், முன்னைய அமைச்சரவையின் பெரும்பாலான அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்படுவார்கள். 

3 அமைச்சர்கள் தேர்தலில் தமது ஆசனங்களை இழந்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிஹிகோ நோடா, இஷிபாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி அமைக்க முயன்றார். 

நோடாவால் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் முழு பெரும்பான்மை இல்லாததால், இஷிபா அரசாங்கத்தை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதது இதுவே முதல் முறையாகும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்