Paristamil Navigation Paristamil advert login

கம்பீரிடம் இந்த பணியை கொடுக்காமல் இருப்பது BCCIக்கு நல்லது! கிரிக்கெட் வர்ணனையாளர் 

கம்பீரிடம் இந்த பணியை கொடுக்காமல் இருப்பது BCCIக்கு நல்லது! கிரிக்கெட் வர்ணனையாளர் 

13 கார்த்திகை 2024 புதன் 09:59 | பார்வைகள் : 420


பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது நல்லது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் கம்பீர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தது குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், 'இந்திய கிரிக்கெட் பற்றி பாண்டிங்கிற்கு என்ன வந்தது? அவர் அவுஸ்திரேலிய அணியைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்' என பதிலளித்தார்.


அவரது இந்த பதில் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் இடையே பல கேள்விகளை எழுப்பியது. 

இந்த நிலையில், கவுதம் கம்பீர் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சு மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செய்தியாளர்களை சந்திக்கும் பணியை கம்பீரிடம் கொடுக்காமல் இருப்பது BCCIக்கு நல்லது. பத்திரிகையாளர்களை எதிர்கொள்வதற்கான தன்மையும், வார்த்தை தேர்வும் அவரிடம் இல்லை. ரோஹித், அஜித் அகர்கர் போன்றோர் செய்தியாளர் சந்திப்புகளை மிகச் சிறப்பாக கையாள்வார்கள்" என தெரிவித்துள்ளார்.     

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்