Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாக்களிப்பு நிலையமொன்றின் பெண் பொறுப்பதிகாரி திடீரென மரணம்

இலங்கையில் வாக்களிப்பு நிலையமொன்றின் பெண் பொறுப்பதிகாரி திடீரென மரணம்

14 கார்த்திகை 2024 வியாழன் 08:07 | பார்வைகள் : 775


கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில், அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலக்கம் 33B, பயாகல இந்துருவாகொடவில் வசிக்கும் லியனகே சாமிகா ருவானி லியனகே என்ற (48) வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு அளுத்கடே மேல் நீதிமன்றில் வேலைத்திட்ட உதவி நீதிபதியாக கடமையாற்றும் இப்பெண் நேற்று   காலை கெஸ்பேவ பொல்ஹேன மடத்தில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில். நேற்று இரவு 7.40 மணியளவில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை சிகிச்சைக்காக பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

எனினும், இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்