இலங்கை அணியின் மிரட்டல் வெற்றி! தெறிக்கவிட்ட மதுஷன்கா
14 கார்த்திகை 2024 வியாழன் 08:51 | பார்வைகள் : 408
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தம்புள்ளையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணியில் நிசங்கா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த அவிஷ்கா பெர்னாண்டோ 100 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 143 ஓட்டங்களும் குவித்தனர்.
அணித்தலவைர் சரித அசலங்கா அதிரடியாக 28 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார். 49.2 ஓவரில் இலங்கை அணி 324 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 27 ஓவரில் 221 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் (48), டிம் ராபின்சன் (35) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
மைக்கேல் பிரேஸ்வெல் மட்டும் வெற்றிக்காக போராட, ஏனைய விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணி 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 34 (32) ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் தரப்பில் மதுஷன்கா 3 விக்கெட்டுகளும், தீக்ஷணா மற்றும் அசலங்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.