ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் பிரேரணை
14 கார்த்திகை 2024 வியாழன் 10:38 | பார்வைகள் : 1187
ஒத்துழைக்க மறுப்பதாக குறிப்பிட்டு அடுத்த வாரம் ஐ நா அணு ஆயுத கண்காணிப்பு குழுவில் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய பிரேரணையை முன்னெடுக்க ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், ஜனவரியில் அவர் பொறுப்புக்கு வர உலக நாடுகள் காத்திருப்பதாகவும் தூதரக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் பிரேரணையால் ஈரானுடனான தூதரக உறவுகள் மேலும் மோசமடையும் என்றே கூறப்படுகிறது. அணு உலைகளுக்கு தொடர்பில்லாத பகுதிகளில் காணப்படும் யுரேனியம் தடயங்கள் தொடர்பில் விளக்க ஈரான் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகிறது.
மேலும், ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்க மீண்டும் கட்டாயப்படுத்துவதே ஐரோப்பிய நாடுகளின் நோக்கமாமாக உள்ளது.
இதனால் சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.
ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோதலின் அபாயத்தை அதன் அணுசக்தி திறன்களைக் குறைப்பதன் மூலம் எளிதாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி முன்னெடுத்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் பிரேரணைக்கு பின்னால் அமெரிக்கா இயங்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.