Paristamil Navigation Paristamil advert login

Calais : மூன்றாவது சடலம் கரை ஒதுங்கியது..!!

Calais : மூன்றாவது சடலம் கரை ஒதுங்கியது..!!

14 கார்த்திகை 2024 வியாழன் 14:19 | பார்வைகள் : 3695


இந்த வார ஆரம்பத்தில் கலே பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், இன்று நவம்பர் 14, வியாழக்கிழமை மற்றுமொரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 

கலே கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கிச் சென்ற பல அகதிகளில், இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலரது சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், இவ்வார திங்கட்கிழமை இரு சடலங்கள் சிதைவடைந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன. 

அதை அடுத்து, இன்று காலை மற்றுமொரு சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து இதுவரை 12 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்