பரிஸ் : நவம்பர் மாதத்தில் 90% சதவீதம் வீழ்ச்சியடைந்த சூரிய ஒளி!
14 கார்த்திகை 2024 வியாழன் 16:02 | பார்வைகள் : 1033
இம்மாதம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பரிஸ் மக்கள் சூரிய ஒளியை பார்த்தது மிகமிக சொற்பமாகும். வழமையான இந்த பருவகாலத்தோடு ஒப்பிடுகையில் 86% சதவீதமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
நவம்பர் 1 ஆம் திகதி முதல் நேற்று நவம்பர் 13 ஆம் திகதி வரை பரிசில் மொத்தமாக 9 மணிநேரங்களும் 49 நிமிடங்களும் மட்டுமே பரிசில் சூரிய ஒளி பதிவாகியுள்ளது. ஏனைய நேரங்களில் எல்லாம் பரிசை மூடுபனி பீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஃபிள் கோபுரம் உட்பட பல்வேறு கட்டிடங்களின் தலைப்பு பகுதி பனிமண்டலத்துக்குள் மறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையான 30 வருடங்களில் இந்த நவம்பர் மாத ஆரம்ப நாட்கள் கொண்ட பருவத்தில் பதிவாகும் சூரிய ஒளியோடு ஒப்பிடுகையில், இது 86% சதவீதமான வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அடுத்தடுத்த நாட்களில் வானம் வெளிப்படும் எனவும், மூடுபனி விலகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.