பிரான்ஸ்- இஸ்ரேல் போட்டிக்கு முன்பதாக ஜனாதிபதி மக்ரோன் விடுத்துள்ள செய்தி..!
14 கார்த்திகை 2024 வியாழன் 16:30 | பார்வைகள் : 2618
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று இரவு 8.30 மணிக்கு பிரான்ஸ் - இஸ்ரேல் அணிகள் மோதும் உதைபந்தாட்ட போட்டி இடம்பெற உள்ளது. இந்த போட்டியைக் காண ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வருகை தர உள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக அவர் பிரெஞ்சு மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”யூத மதத்துக்கு மீதான தாக்குதலை நாம் அனுமதிக்கப்போவதில்லை. நாம் எங்கும் யூத மதத்துக்கு அடிபணியப்போவதில்லை. பிரெஞ்சுக் குடியரசில் யூத மதம் மீதான தாக்குதல்கள் ஒருபோதும் மேலோங்கப்போவதில்லை!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் நெதர்லாந்து தலைநகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போது பலத்த மோதல் வெடித்திருந்தது. அதன் எதிரொலி இங்கு Stade de France அரங்கிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.