Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்றத் தேர்தலிலும் அநுர அலை தீவிரம் - பெரும்பான்மை பலத்தை பெற வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலிலும் அநுர அலை தீவிரம் - பெரும்பான்மை பலத்தை பெற வாய்ப்பு

14 கார்த்திகை 2024 வியாழன் 17:40 | பார்வைகள் : 669


நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை நடைபெற்று முடிந்த நிலையில், பெறுபேறுகள்  தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடவும் இம்முறை மிகவும் குறைவாக வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். 

சராசரியாக 67 வீதமான மக்களே வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது. 

சிங்கள மக்கள் மத்தியில் அநுர அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

அதற்கமைய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தென்னிலங்கையில் மட்டுமன்றி, தமிழர் தாயகப்பகுதியில் அநுரவுக்கு அதிகளவான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்