கோரை புல்லும் ஈஃபிள் கோபுரமும்!!
22 வைகாசி 2019 புதன் 16:30 | பார்வைகள் : 18487
ஈஃபிள் கோபுரம் ஏன் உலக அதிசயமானது??!! இந்த கேள்விக்கு என்றாவது பதில் யோசித்தது உண்டா??
• ஈஃபிள் கட்டப்பட்டபோது உலகின் உயரமான கட்டிடமாக இருந்தது.
• முழுக்க முழுக்க இரும்பிலான முதல் கட்டிடம்.
என நீங்கள் காரணத்தை அடுக்கலாம். ஆனால் காரணம் இவை அனைத்தும் இல்லை.
ஈஃபிள் கோபுரம் 'உலக அதிசயம்' ஆனதின் பின்னால் ஒரு அசாத்தியமான கதை உண்டு.
ஈஃபிள் கோபுரம் கட்டப்படும் போது உலகின் உயரமான கோபுரமாக இருந்தது உண்மைதான். ஆனால் அதுவே மிக பயப்படும் படியான விஷயமாகவும் இருந்தது. பலத்த காற்று வீசினால் என்ன ஆகும்...??
இதை யோசித்த ஈஃபிள், உலகே வியக்கும்படி, காற்றுக்கு ஈடு கொடுக்கும் படி ஈஃபிள் கோபுரத்தை வடிவமைத்தார்.
தியரி படு சிம்பிள்.. வீசும் புயலுக்கு வளைந்துகொடுக்கும் கோரை புல் இறுதிவரை நின்றின்றது... விறைப்பாக நிற்கும் மரம் பாதியோடு முறிந்து விழுகிறது.
புயல் வீசும் போதெல்லாம் ஈஃபிள் கோபுரம் அசையும். காற்றின் வாக்கில்.. கிட்டத்தட்ட 13 இஞ்ச் வரை அசையக்கூடியவாறு கோபுரம் கட்டப்பட்டது. காற்று வீசும் போது ஈஃபிள் கோபுரத்தின் உச்சி அங்கேயும் இங்கேயும் அசைவதால் காற்றுக்கு வளைந்து கொடுத்து இன்றுவரை கம்பீரமாய் நிற்கின்றது.
இது எப்படி சாத்தியம் என அப்போதும் இப்போதும் ஆச்சரியமாக்கி வைத்துள்ளார்கள்.
இதை சாத்தியமாக்கியதால் தான் ஈஃபிள் கோபுரம் இன்றுவரை 'உலக அதிசயமப்பா'!!