அடேங்கப்பா...!! - ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மின்தூக்கியின் சாதனை!!

19 வைகாசி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 20940
ஈஃபிள் கோபுரம் தற்போது தனது 130 ஆவது பிறந்த தினத்தை தற்போது கொண்டாடிவருகின்றது.
ஈஃபிள் கோபுரம் கட்டப்படும் போது படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டன. மொத்தமாக 1,710 படிக்கட்டுக்கள் உள்ளன. ஆனால் அவற்றை தற்போது நீங்கள் முதலாவது தளத்துக்குச் செல்ல மாத்திரமே பயன்படுத்த முடியும்.
மீதமானவரை எல்லாம் வருடத்துக்கு ஒரு தடவை 'யார் வேகமாக ஏறுவது?' என போட்டிகள் வைக்கவும், ஏலத்துக்கு விடவும் தான் பயன்படுகின்றன. தொலைகிறது...
இங்குள்ள மின் தூக்கிகள் (Lift) குறித்து சில சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன.
இந்த மின் தூக்கிகள் வருடத்துக்கு 103,000 கிலோமீற்றர்கள் பயணிக்கின்றன. 'இரும்பு மனுஷி'யை பார்வையிட நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், இது 'சராசரி' கணக்குத்தான். ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டு தான் செல்கின்றது.
livescience எனும் இணையத்தளம் தெரிவிக்கும் போது, 'பூமியை சுற்றி வருவதுக்குண்டான தூரத்தை விட, இரண்டரை மடங்கு அதிக தூரம் இந்த மின் தூக்கிகள் பயணிக்கின்றன!' என தெரிவித்துள்ளனனர்.
அடேங்கப்பா...!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1