Montmartre மலையும் சில யுத்தங்களும்!!
16 வைகாசி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18668
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஈஃபிள் கோபுரத்தில் ஹிட்லர் ஏற ஆசைப்பட்டது பரவலாக நீங்கள் அறிந்தது தான்.
அதேபோல், பல்வேறு யுத்தங்களின் போது பரிசில் உள்ள Montmartre மலை, பாரிய பங்காற்றியுள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து பார்க்கலாம்.
1590 ஆம் வருடம், மதத்துக்கான யுத்தம் பரிசில் இடம்பெற்றது. இதன்போது எதிராளிகளை தாக்க, நான்காம் ஹென்றி மன்னன் இந்த மலை மீது ஆட்லொறிகளை ஏற்றி அங்கிருந்து தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.
1871 ஆம் ஆண்டில், 'பிராங்கோ-பிரஷியன் யுத்த'த்தின் போது, பிரெஞ்சு இராணுவத்தினர் பாரிய அளவிலான ஆட்லொறிகளை மலை மீது ஏற்றினார்கள். பின்னர் அங்கிருந்து குண்டுமழை பொழிந்தார்கள்.
ஆனால் இவை எல்லாம் பிரெஞ்சு இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல், 1814 ஆம் ஆண்டு இரஷ்ய இராணுவ வீரர்களால் இந்த மலை கைப்பற்றப்பட்டது.
இந்த உயரம் பரிஸ் நகரை தகர்க்க போதுமானதாய் இருந்தது.
பிரெஞ்சு பேரரசுக்கு பெரும் தலைவலியாய் இருந்தது இரஷ்ய இராணுவத்தினர் தான். 'பரிஸ் யுத்தம்' அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
இந்த துன்பங்கள் எல்லாம் போதும் என Sacré-Cœur (Basilique du Sacré-Cœur,) தேவாலயத்தை 1919 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள்.
இதனால் முதலாம் இரண்டாம் உலகப்போர்களிடம் இருந்து இந்த மலை தப்பித்திருந்தது எனவே சொல்லலாம்.