Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய இராணுவத்தினர்!!

பிரான்சில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய இராணுவத்தினர்!!

16 கார்த்திகை 2024 சனி 08:00 | பார்வைகள் : 4855


பயிற்சிகளை முடித்துக்கொண்டு உக்ரேனிய இராணுவத்தினர் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.

2,000 உக்ரேனிய இராணுவத்தினர் பிரான்சில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி, பயிற்சிகளையும் பிரெஞ்சு இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அவர்கள் பிரான்சில் பயிற்சி பெற்று வந்த நிலையில், இன்று நவம்பர் 16, சனிக்கிழமை அவர்கள் பிரான்சில் இருந்து மீண்டும் உக்ரேன் நோக்கி பயணிக்க உள்ளனர்.

பயிற்சிகளின் போது வழங்கப்பட்ட ஆயுதங்களை பிரான்ஸ் அப்படியே அவர்களிடமே கையளித்துள்ளது. 

அத்தோடு AMX-10 RC ரக பீரங்கி தாங்கிய கவச  வாகனங்களையும் அவர்களுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்