இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது; ஆய்வறிக்கை !
16 கார்த்திகை 2024 சனி 07:07 | பார்வைகள் : 159
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் ஆண்டில் உலக பொருளாதாரம் குறித்து நிதி சேவைகள் நிறுவனம் மூடிஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பணவீக்கம், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு இருந்த உலக பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.
பணவீக்கம்
நடப்பாண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.2ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு இந்த வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும். 2026ம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறையும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய வேண்டும் என்றால் உணவு பொருட்கள் விலை குறைய வேண்டும். காய்கறி விலை அதிகரித்தது காரணமாக, அக்டோபர் மாதம் மொத்த பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.