Paristamil Navigation Paristamil advert login

Montmartre மலை! - 18 ஆம் வட்டாரத்தில் ஒரு அதிசயம்!!

Montmartre மலை! - 18 ஆம் வட்டாரத்தில் ஒரு அதிசயம்!!

15 வைகாசி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18893


பரிசின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Montmartre மலைப்பிரதேசம் நீங்கள் அறிந்ததே. இன்று இது குறித்த சில புதிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். 
 
130 மீற்றர் உயரம் கொண்ட இந்த மலை பரிசில் உள்ள உயரமான மலையாகும். rue Caulaincourt and rue Custine ஆகிய வீதிகளை வடக்கின் எல்லையாகவும், rue de Clignancourt வீதியினை கிழக்கின் எல்லையாகவும், boulevard de Clichy மற்றும் boulevard de Rochechouart ஆகியவற்றை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட இந்த மலை, மொத்தம் 60 ஹெக்டேயர்கள்  (150 ஏக்கர்கள்) பரப்பை கொண்டது. 
 
இந்த மலை என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்?? சரிதான்.. Sacré-Cœur தேவாலயம் தான். 
 
1875 ஆம் ஆண்டு இந்த தேவாலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1919 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட இந்த தேவாயலம் தற்போது நூறாவது வருடத்தினை நிறைவு செய்துள்ளது. 
 
<<Montmartre>> எனும் பெயர் எங்கிருந்து வந்தது?? இந்த வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து வந்திருக்கக்கூடுன் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
ஆரம்பத்தின் இந்த மலை Mons Martis என அழைக்கப்பட்டதாக சான்றுகள் உண்டு. அப்படியென்றால் Mount of Mars", (செவ்வாய் மலை) என அர்த்தம் எனவும், அதுவே பின்நாட்களில் மருவி மருவி, Montmartre ஆக மாறியதாகவும் அறியமுடிகிறது. 
 
Anvers, Pigalle ஆகிய இரு மெற்றோ நிலையங்களும் இந்த மலையை இணைக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்