Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ஜனாதிபதிக்காக போரில் களமிறங்கும் வடகொரிய வீரர்கள் 

ரஷ்ய ஜனாதிபதிக்காக போரில் களமிறங்கும் வடகொரிய வீரர்கள் 

16 கார்த்திகை 2024 சனி 12:26 | பார்வைகள் : 4822


உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை உக்ரைன் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதிக்காக போரில் களமிறங்கும் வடகொரிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் வைத்தே மொத்தமாக தப்பிவிடுவார்கள் என முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்காக களமிறங்கும் வடகொரிய வீரர்கள் போரில் இருந்து தப்பிக்கும் வழியை மட்டுமே பார்ப்பார்கள் என 2000 ஆண்டு தொடக்கத்தில் வடகொரிய இராணுவத்தில் பணியாற்றிய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்களத்தில் நின்று போரிடும் நிலைக்கு வடகொரிய வீரர்கள் தயாராகவில்லை என தாம் நம்புவதாகவும் ரஷ்ய வீரர்களுக்கு மனித கேடயமாக இவர்கள் பயன்படுத்தக் கூடும் என்றார்.

வடகொரியா இராணுவத்தில் Storm Corps என அறியப்படும் படையை உக்ரைனில் போரிடும் வகையில் கிம் ஜோங் உன் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 10,000 பேர்கள் கொண்ட வலுவான படை எதிர்வரும் நாட்களில் உக்ரைனுக்கு எதிராக களமிறக்க உள்ளது.

இந்த நிலையில், வியட்நாம் போருக்குப் பிறகு போரைப் பார்க்காத கொரிய வீரர்கள் எவ்வளவு சிறப்பாகப் போரிடுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் வட கொரியா வீரர்கள் உக்ரைன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும்,

அவர்கள் இளைஞர்கள் படை என்பதால் போரில் உறுதியுடன் சண்டையிட மாட்டார்கள் என்றும் அந்த முன்னாள் ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் இருந்து இதுவரை வெளியுலகம் பார்த்திராத அவர்கள், பெரும் எண்ணிக்கையில் தப்பியோடும் நிலை ஏற்படும் என்றார். ரஷ்ய வீரர்கள் அவர்களை மதிக்க வாய்ப்பில்லை, அவர்களைத் தங்கள் மனிதக் கேடயங்களாகக் கருதுவார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைன் எல்லையில் வடகொரிய வீரர்கள் எவரும் தப்பியோடியதாக உறுதி செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள் சிறையில் தள்ளப்படும் ஆபத்தும் இருப்பதாக அந்த முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்