பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்கள்..!
16 கார்த்திகை 2024 சனி 13:42 | பார்வைகள் : 354
பாகிஸ்தான் நாட்டை விட்டு கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் வெளியேற விரும்புவதாக புதிய ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அவற்றில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது சட்டவிரோதமாக குடியேறும் முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் இணைந்து பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட நிலையில், சுமார் 40% பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து இருந்தும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானியர்கள் பலர் சட்டவிரோதமாக புலம் பெயர்ந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.