Paristamil Navigation Paristamil advert login

தையல் இயந்திரத்தின் கதை!!

தையல் இயந்திரத்தின் கதை!!

9 வைகாசி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18831


Barthélemy Thimonnier என்பவர் ஒரு சோம்பேறி. ஆனால் அவர் பின்னாளில் உலகத்துக்கு தேவையான மிக முக்கியமான ஒரு தேவையை நிறைவேற்றினார். 
 
Barthélemy Thimonnier தான் இந்த உலகத்துக்கு முதன் முதலாக தையல் இயந்திரத்தை கண்டுபிடித்து தந்தவர். 
 
1830 ஆம் ஆண்டு இவர் தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதை கண்டுபிடிக்கும் அளவுக்கு அவருக்கு பலத்த விஞ்ஞான மூளையா...?? என்றால்.. இல்லை! அப்படியெல்லாம் இல்லை. 
 
குடும்பத்தில் யாரேனும் பெரிய தையல் வல்லுனர்கள் உண்டா என்றால் அதுவும் இல்லை. 
 
Thimonnier க்கு ஏழு சகோதர்கள். இவர் தான் மூத்தவர். படிப்பும் அப்படி இப்படித்தான் ஓடும். 
 
Rhône மாவட்டத்தின் Amplepuis நகருக்கு 1795 ஆம் ஆண்டு குடிபெயர்ந்த இவரது குடும்பம், ஒரு சராசரி குடுமம் தான். அத்தனை பணம் புழங்கும் குடும்பம் இல்லை. 
 
Thimonnier க்கு திருமணம் முடிந்த கையோடு Saint-Étienne நகருக்கு குடிபெயர்ந்தார். சரி வாழ்வதற்கு பணம் வேண்டுமே என, 1823 ஆம் ஆண்டு 'தையலகம்' ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். 
 
கைகளால் ஊசியில் நூலை கோர்த்து தைக்கவேண்டும். அடிப்படையில் சோம்பேறியான இவருக்கு இந்த தொழில் ஒன்றும் அத்தனை பிடித்தமானதாக இல்லை. 
 
அந்த சமயத்தில் தைப்பதற்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. 
 
'சீக்கிரம் கண்டுபிடியுங்கடாப்பா..!' என இருந்தவர், ஒருநாள் தைத்துக்கொண்டிருக்கும் போது, 'ஊசி ஒரு முனையில் குத்தி, மறுமுனையில் வெளியே வந்து, மீண்டும் மறுமுனையில் குத்தி மீண்டும் மறுபக்கம் வருவதை' ஆச்சரியமாக பார்த்து, 'அட இவ்வளவு தான் தையலா?' என ஆச்சரியப்பட்டார். 
 
அதன் விளைவு தான் இந்த தையல் இயந்திரம். 
 
இந்த ஊசி 'போய் வருவதை' இரவு பகல் பாராமல் சிந்தனையில் ஓடவிட்டார். தையல் இயந்திரம் பிறந்தது. 
1830 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி தையல் இயந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 
 
(இந்த பதிவு வாய்வழி கதைகளை அடிப்படையாக கொண்டு எழுதபட்டது. தரவுகள் உண்மை என்றபோதும், சம்பவங்களின் உண்மைத்தன்மை 'சந்தேகம்' தான்!! ) 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்