Paristamil Navigation Paristamil advert login

5 பெண்களை காதலித்து ஏமாற்றிய நபர் கைது...!

5 பெண்களை காதலித்து ஏமாற்றிய நபர் கைது...!

16 கார்த்திகை 2024 சனி 13:54 | பார்வைகள் : 4009


ஒரே குடியிருப்பில் 5 பெண்களை காதலித்து ஏமாற்றிய சீன மோசடிக்காரன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர், தன்னை பணக்காரன் என்று நடித்து ஐந்து பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சியாஜுன், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.

தான் பணக்கார வீட்டைச் சேர்ந்தவன் என்று பொய் சொல்லி, விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை என்று கூறி பெண்89ஃஃகளை கவர்ந்துள்ளார்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சியாஜுன் தனது மனைவி மற்றும் நான்கு காதலிகளை ஒரே குடியிருப்பில் வைத்து, அவர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

அவரது மனைவியும், முதல் காதலியும் ஒரே கட்டிடத்தில் வசித்து வந்தாலும், இருவரும் தங்கள் குழந்தைகளை ஒன்றாக அழைத்துச் சென்று பழகி இருந்தாலும், தங்களுக்கு ஒரே கணவர் இருப்பது தெரியாமல் இருந்துள்ளனர்.

  சியாஜுன் தன்னை பணக்காரன் என்று கூறி, முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த உண்மை பின்னர் தெரியவந்த பிறகு சியாஜுனை வீட்டை விட்டு துரத்தியதுடன், குழந்தையை தானே வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆன்லைன் மூலமாக பழகி இரண்டாவது பெண்ணிடம் ரூ.16.50 லட்சம் மோசடி செய்துள்ளார்.

அத்துடன் மனைவி மற்றும் முதல் காதலி தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் உள்ள இரண்டு பல்கலைக்கழக மாணவிகளை ஏமாற்றி ரூ.1.7 லட்சம் மற்றும் ரூ.1.18 லட்சம் வசூல் செய்துள்ளார். சியாஜுன் இதனுடன் நிற்காமல் செவிலியர் ஒருவரிடமிருந்தும் ரூ.94 ஆயிரம் ஏமாற்றியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட பெண்களில் ஒருவர் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்ட போது சியாஜுன் போலி ரூபாய் நோட்டுகளை வழங்கியதை கண்டுபிடித்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

திமன்றம் சியாஜுனுக்கு 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்