அமெரிக்காவில் 'பரிஸ்'...!!
8 வைகாசி 2019 புதன் 11:30 | பார்வைகள் : 18536
'பரிஸ்' எனும் பெயர் மீது அத்தனை காதல். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 'பரிஸ்' எனும் பெயரில் பல நகரங்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினம் உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் தான்..!!
இந்தியாவின் சென்னை மாநகரில் 'பரிஸ்' என ஒரு இடம் உள்ளது. அதற்கு பின்னால் உள்ள கதையை விட்டுவிடுங்கள்.
உலகின் நீளமான 'போன் கோல்' தொலைபேசி அழைப்பு... Brantford நகரில் இருந்து பரிசுக்கு அழைக்கப்பட்டது. இந்த அழைப்பை திருவாளர் கிரகாம் பெல் மேற்கொண்டிருந்தார். 13 கி.மீ நீளம் இந்த தொலைபேசி அழைப்பின் தூரம். கனடாவில் உள்ள Brantford நகரில் இருந்து பரிஸ் என்றால் அது கொள்ளை தூரமாச்சே என்றால்... தவறு.. இது கனடாவில் உள்ள 'பரிஸ்'.. அட!! (ஓகஸ்ட் 10,1876 ஆம் ஆண்டு இடம்பெற்றது இந்த சம்பவம்)
தொலைகிறது, ஜப்பானில், சீனாவில் எல்லாம் 'பரிஸ்' உள்ளது.
ஆனால், ஒருபடி மேலே போய் அமெரிக்காவில் 'பரிஸ்' எனும் பேரில் இரண்டு டஜன் நகரங்கள் உள்ளன.
Paris, Idaho
Paris, Texas
Paris, Arkansas
Paris, Missouri
Paris, Grant County, Wisconsin
என இந்த நகரங்களின் பட்டியல் நீள்கிறது.
சென் பரிஸ், புதிய பரிஸ், பழைய பரிஸ், பரிஸ் வெர்ஜீனியா, பரிஸ் கலிஃபோர்னியா, பரிஸ் பென்ஸில்வேனியா, பரிஸ் நியூயார்க் என இந்த பெயர் பட்டியல் ஒரு வகை தொகை இல்லாமல் நீள்கிறது.
'மேற்கு பரிஸ்' என்றெல்லாம் ஒரு நகரம் அமெரிக்காவில் உள்ளது. அடேய்களா...!!
இதெல்லாம் பரிஸ் நகரின் மீது கொண்ட காதலால் வந்தது என நாம் எண்ணிக்கொள்ளலாம்.
மொத்தமாக அமெரிக்காவில் 25 நகரங்கள் 'பரிஸ்' எனும் பெயர்கொண்டு உள்ளது.
அட.. இதென்ன பிரம்மாதம்.. ஆப்பிரிக்காவில் ஒரு பரிஸ் உள்ளது. என்ன நெஞ்சு வலிக்கிறதா..? பிரான்சிலேயே ஒரே ஒரு 'பரிஸ்' இருக்கும் போது, இதெல்லாம் கேள்விப்பட்டால் நெஞ்சு வலிக்கும் தானே ... சரி விடுங்கள்!!