Paristamil Navigation Paristamil advert login

வாணவேடிக்கை காட்டிய மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து அணிக்கு தரமான பதிலடி

வாணவேடிக்கை காட்டிய மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து அணிக்கு தரமான பதிலடி

17 கார்த்திகை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2387


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

செயின்ட் லூசியாவில் நடந்த இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. ஜேக்கப் பெத்தெல் 62 (32) ஓட்டங்களும், பிலிப் சால்ட் 55 (35) ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 38 (23) ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், எவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் கூட்டணி சிக்ஸர் மழை பொழிந்தது. 

இவர்களது பார்ட்னர்ஷிப் 55 பந்துகளில் 136 ஓட்டங்கள் குவித்தது. எவின் லீவிஸ் (Evin Lewis) 31 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அடுத்த பந்திலிலேயே ஷாய் ஹோப்பும் அவுட் ஆனார். அவர் 24 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த பூரன் டக்அவுட் ஆகி வெளியேற மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சிக்குள்ளானது. 

எனினும், அணித்தலைவர் ரோவ்மன் பாவெல் அதிரடியில் மிரட்டினார். ஹெட்மையர் (7) ஆட்டமிழந்து வெளியேற, ஷெர்பானே ரூதர்போர்டு தெறிக்கவிட்டார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவரிலேயே 221 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாவெல் 38 (23) ஓட்டங்களும், ரூதர்போர்டு 29 (17) ஓட்டங்களும் விளாசினர். 

இங்கிலாந்து தரப்பில் ரெஹான் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடரை ஏற்கனவே இழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.     
 

வர்த்தக‌ விளம்பரங்கள்