மே 6, 1889!!
7 வைகாசி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18632
தலைப்பில் உள்ள திகதி, நேற்றில் இருந்து சரியாக 130 வருடங்களுக்கு முற்பட்டது.
இந்த திகதி மிக முக்கியமான திகதி. உலக வர்த்தக கண்காட்சி, இன்றைய திகதியில் பரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உலகம் இதுவரை காணாத ஒரு அதிசயத்தை அன்றைய நாளில் பரிஸ் உள்ளிட்ட உலக மக்கள் கண்டுகொண்டனர்.
வானை முட்டிக்கொண்டு கூம்பு வடிவில் ஒரு கோபுரம்..?? இது என்ன? இத்தனை உயரமாக உள்ளதே.. என உலகின் அனைத்து கண்களும் பரிசையே உற்று நோக்கின.
உலக வர்த்தக கண்காட்சிக்காக திருவாளர். ஈஃபிள் என்பவரால் அந்த கோபுரம் கட்டப்பட்டு, அது 'ஈஃபிள் கோபுரம்' என அழைக்கப்பட்டது.
312 மீற்றர் உயரம் அந்த கோபுரம். கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் இந்த கோபுரம் குறித்து தான் ஆர்வமாக இருந்தார்கள்.
ஆனால் கோபுரம் திறப்பதற்கு இன்னும் நாட்கள் இருந்தன. மே மாதம் 15 ஆம் திகதி இந்த ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்காக அனுமதிக்கப்பட்டது.
மறுநாள், உலகம் முழுவதும் இருந்த தலையாய பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்புச் செய்தி இதுதான்.
இந்த ஈஃபிள் கோபுரம் தனது 130 ஆவது பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடுகிறது. எங்களுடைய வாழ்த்துக்களும்...!!