Paristamil Navigation Paristamil advert login

வரலாற்றுச் சிறப்புமிக்க Necker மருத்துவமனை! - சில தகவல்கள்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க Necker மருத்துவமனை! - சில தகவல்கள்!!

4 வைகாசி 2019 சனி 10:00 | பார்வைகள் : 17950


பரிசுக்குள் எந்த குழந்தைக்கு ஆபத்து வந்தாலும், Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அடிக்கடி செய்திகளில் படித்திருப்பீர்கள்..., இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இந்த மருத்துவமனை குறித்து தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

பரிசின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த மருத்துவமனை குழந்தைகள்களுக்கான பிரத்யேக மருத்துவமனை. குழந்தைகளுக்கான சகல சிகிச்சைகளும் இங்கு உண்டு.

இந்த மருத்துவமனை 1778 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகில் உள்ள மிகப்பழமையான சிறுவர் மருத்துவமனை இது.

பதினாறாம் லூயி மன்னனிடம் அமைச்சராக இருந்த Jacques Necker என்பவரின் மனைவி Madame Necker, இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் இந்த மருத்துவமனை பொது மருத்துவமனையாக இருந்து, பின்னர் பெண்களுக்காக மருத்துவமையாக உருமாறி, கர்ப்பவதிகள் அனுமதிக்கப்படும் சிறப்பு மருத்துவமனையாக புகழ்பெற்று, நாளடைவில் குழந்தைகள் மருத்துவமனையாக மாறியது. இதற்குள்ளாக 1920 ஆம் ஆண்டை தொட்டிருந்தது.

இங்கு ஒரு புகழ்பெற்ற சுவர் ஒன்று உள்ளது. அமெரிக்க சுவர் ஓவியர் Keith Haring இந்த சுவற்றில் ஒரு ஓவியம் வரைந்தார். மிக புகழ்பெற்ற அந்த ஓவியம் தற்போது இல்லை என்றபோதும், வரலாற்றுச் சின்னமாக அந்த சுவர் மாத்திரம் தற்போது உள்ளது.

உலகுக்கு நுன்னொலிபெருக்கியை ( stethoscope) கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய பிரபல மருத்துவரான René Laennec, இந்த மருத்துவமனையில் பணி புரிந்துள்ளார். அட...!!

149, rue de Sèvres, 
Paris 15 இல் உள்ளது இந்த மருத்துவமனை. 24 மணிநேர அவசரகால சேவையும் உண்டு.

+33 1 44 49 40 00 எனும் தொலைபேசி இலக்கத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.



 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்