Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

17 கார்த்திகை 2024 ஞாயிறு 16:15 | பார்வைகள் : 4505


வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் கிணற்று பகுதிக்கு சென்று தண்ணீர் எடுக்க முயன்ற போது கிணற்றினுள்  தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்