Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்ச் படிச்சிக்கிட்டேன்... தமிழை தவிர்த்துவிட்டேன்...! அமைச்சர் மகன்

பிரெஞ்ச் படிச்சிக்கிட்டேன்... தமிழை தவிர்த்துவிட்டேன்...! அமைச்சர் மகன்

18 கார்த்திகை 2024 திங்கள் 02:46 | பார்வைகள் : 274


நான் பிரெஞ்சைத்தான் மொழிப் பாடமாக படிக்கிறேன். தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை,'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷின் மகன் கவின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையின் 'பள்ளிக்கல்வி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்' சார்பில், அரசு, தனியார் பள்ளி மாணவர்களை தொழில் முனைவோராக்க, அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அவரின் இரண்டாவது மகன் கவின் நண்பர்களுடன் சேர்ந்து சான்றிதழ் பெற்றார். அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''கல்வி சார்ந்த படிப்புகளைத் தாண்டி, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட சிலவற்றை என் மகன் பேசுகையில் தந்தையாக நான் பெருமைப்படுகிறேன்,'' என்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஐ.சி.எஸ்.சி., பாடத்திட்ட பள்ளியில் கவின் 8 ம் வகுப்பு படிக்கிறார். சான்றிதழ் பெற்றது குறித்து அவர் கூறுகையில், ''எனக்கு கணிதப்பாடம் மிகவும் எளிது. பிரெஞ்ச் பாடம் தான் கஷ்டம். அதைத்தான் மொழிப்பாடமாக எடுத்துள்ளேன். தமிழை மொழிப்பாடமாக எடுக்கவில்லை,'' என்றார். தமிழைக் காக்க ஹிந்தியை எதிர்க்கிறது தி.மு.க.,. அந்த அரசில் அமைச்சராக உள்ளவரின் மகன் தமிழை தவிர்த்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்