பரிசில் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா..?!!
11 மாசி 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18864
பிரெஞ்சு புதினத்தில் பிரான்ஸ் குறித்து எத்தனையோ தகவல்களை அறிந்துகொள்கின்றீர்கள். இன்றும் மிக முக்கியமான தகவல் ஒன்றை அறிந்துகொள்ளப்போகின்றீர்கள்.
ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை கணக்கிடப்பட்டு வருகின்றது. அந்த கணக்கெடுப்பில் வந்த தொகை தான் அவ்வருடம் முழுவதும் 'பதிவேடுகளில்' பதியப்படு. ஒருவேளை மக்கள் தொகையில் உங்களை சேர்த்துக்கொள்ள மறந்துவிட்டால் (ஹிஹி...) அடுத்த வருடம் தான் இணைத்துக்கொள்வார்கள்.
சரி, பரிசில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட தகவலின் படி, 21 இலட்சத்து 48 ஆயிரத்து இருநூற்று எழுபத்து ஓர் பேர் வசிக்கின்றனர். ( இலக்கங்களில் 2,148,271 பேர்) தோராயமாக 2.14 மில்லியன்.
அதுவே இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் ஒரு கோடியே 22 இலட்சத்து 78 ஆயிரத்து இருநூற்று பத்து பேர் வசிக்கின்றனர். (இலக்கங்களில் - 12,278,210 பேர்) தோராயமான 12.21 மில்லியன்)
அதாவது பிரான்சின் மொத்த சனத்தொகையில் 18 வீதமான மக்கள் இல்-து-பிரான்சில் தான் வசிக்கின்றனர்
பரிசில் 2 மில்லியன் பேர் வசிக்கின்றனர். இதுவே சீன தலைநகர் பீஜிங் அல்லது இந்திய தலைநகர் புது தில்லியை எடுத்துக்கொண்டால் அங்கு 21 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். (சும்மா ஒரு தகவலுக்கு சொன்னோம் பாஸ்..)