Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

12 ஐப்பசி 2024 சனி 14:07 | பார்வைகள் : 6375


எலிமினேஷனில் திடீர் திருப்பம்; பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?
Bigg boss Tamil season 8 Evicttion : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வார முடிவில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் ஆனது யார் என்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ந் தேதி தொடங்கப்பட்டது. 9 ஆண் மற்றும் 9 பெண் போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்ட பிக்பாஸ் 24 மணிநேரத்தில் ஒரு எவிக்‌ஷன் நடைபெறும் என கூறினார். அதன் அடிப்படையில் நடிகை சாச்சனா நமிதாஸ் முதல் நாளிலேயே எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

சாச்சனாவின் எவிக்‌ஷன் ஏற்றுக்கொள்ள முடியாதது என விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அவரை வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ். சாச்சனாவின் வரவால் ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிக்பாஸ் என்றாலே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான். அதன் அடிப்படையில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த வார நாமினேஷனில் ரவீந்தர், ரஞ்சித், முத்துக்குமரன், ஜாக்குலின், செளந்தர்யா, அருண் பிரசாத் ஆகிய 6 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் அருண் பிரசாத் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் ப்ரீ பாஸை வென்றதால் அவர் இந்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பி உள்ளார். இந்த நாமினேஷனில் கம்மியான ஓட்டு வாங்கிய போட்டியாளராக இருந்த அருண் பிரசாத் தப்பி உள்ளதால் எஞ்சியுள்ள 5 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளனர்.

சமீபத்திய தகவல்படி அருண் பிரசாத்துக்கு அடுத்தபடியாக கம்மியான வாக்குகள் உடன் இருப்பது ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் தான். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருந்தது. அதிலும் ரவீந்தர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி லேட்டஸ்ட் தகவல்படி ரவீந்தர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராகவும் ரவீந்தர் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்