Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி மகன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லுகிறாரா ?

விஜய் சேதுபதி மகன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லுகிறாரா ?

12 ஐப்பசி 2024 சனி 14:13 | பார்வைகள் : 6182


விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து விட்டது என்பதும், போட்டியாளர்களுக்கு சண்டை சச்சரவு என்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி, இந்த சீசனில் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை எலிமினேஷன் செய்வது, அதன் பின் மீண்டும் அந்த போட்டியாளரை ரீஎண்ட்ரி செய்வது என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் என 18 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீர் ட்விஸ்டாக, விஜய் சேதுபதி மகன் சூர்யா, பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.


விஜய் சேதுபதி மகன் சூர்யா, ஒரு போட்டியாளராக இல்லாமல், தான் அறிமுகமாகும் ’பீனிக்ஸ்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருக்விஜய் சேதுபதி மகன்ர் என்று கூறப்படுகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ’பீனிக்ஸ்' என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக, விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யாவை எப்படி ட்ரீட் செய்வார், இருவருக்கும் இடையிலான ஜாலியான உரையாடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்