ரொனால்டோ அடித்த ஒற்றை கோல்! போலந்தை வீழ்த்திய போர்த்துக்கல்
13 ஐப்பசி 2024 ஞாயிறு 10:50 | பார்வைகள் : 3993
போலந்து அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் போர்த்துக்கல் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Warszawa மைதானத்தில் நடந்த தேசிய லீக் கால்பந்து போட்டியில் போலந்து (Poland) மற்றும் போர்த்துக்கல் (Portugal) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கிக் செய்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே வந்துவிட்டது.
எனினும் 26வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு பெர்னார்டோ சில்வா (Bernardo Silva) மூலம் முதல் கோல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 37வது நிமிடத்தில் கம்பத்தில் பட்டு வெளியே வந்த பந்தை, ரொனால்டோ விரைந்து வந்து வலைக்குள் தள்ளினார்.
இந்த கோல் மூலம் போர்த்துக்கல் அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் 78வது நிமிடத்தில் போலந்தின் Piotr Zielinski மிரட்டலாக கோல் அடித்தார்.
88வது நிமிடத்தில் Jan Bednarek (போலந்து) எதிரணி வீரர் கிக் செய்த பந்தை தடுக்க முயற்சித்தபோது, அவரது காலில் பட்டு Own Goal ஆக மாறியது.
இறுதியில் போர்த்துக்கல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து ரொனால்டோ தனது பதிவில், "தேசிய லீக் தொடரில் இது முக்கியமான வெற்றி. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, அதற்காக செல்வோம்!" என கூறியுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan