நான் சரியாக ஆடாதபோதும்: மனம் திறந்த சாதனை வீரர் சஞ்சு சாம்சன்
13 ஐப்பசி 2024 ஞாயிறு 10:57 | பார்வைகள் : 989
வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், தனக்கு ஆதரவளித்தவர் மூலம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று வாஷ்அவுட் செய்தது.
இப்போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் விளாசினார்.
இந்நிலையில் தனது கிரிக்கெட் பயணம் குறித்து சாம்சன் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதனால் அழுத்தம் மற்றும் தோல்விகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
அணியில் உள்ள அனைவரும் நான் சரியாக ஆடாதபோதும், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தனர். எனது கேப்டன், பயிற்சியாளர்களுக்கு புன்னகையை கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.