எரிவாயு, மின்சாரக்கட்டணம் உயர்கிறதா..??! - ஊடகப்பேச்சாளர் Maud Bregeon பதில்!
14 ஐப்பசி 2024 திங்கள் 07:09 | பார்வைகள் : 12744
எரிவாயு இறக்குமதி மீது வரி அதிகரிக்கப்படும் என அண்மையில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. ஆனால் அந்தச் செய்தியினை அரச ஊடகப்பேச்சாளர் Maud Bregeon மறுத்துள்ளார்.
'புதிய அரசாங்கத்தில் எரிவாயுவுக்கான வரி அதிகரிப்புக்கு சாத்தியமில்லை. சென்ற வருட ஆரம்பத்தில் இந்த வரிக்கட்டணம் இரண்டு மடங்காக அதிகரித்திருந்தது. மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டால் பிரெஞ்சு மக்களை அது நேரடியாகத் தாக்கும்!' என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, புதிய ஆண்டில் மின்சாரக்கட்டணமும் 10% சதவீதத்தால் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட அனைத்து சந்தாதாரருக்கும் (80% சதவீதமானவர்களுக்கு) இந்த மின்சாரக்கட்டண குறைப்பு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan