Paristamil Navigation Paristamil advert login

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பிரெஞ்சுப் பாண் - இரண்டாம் இடத்தில் Strasbourg..!!

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பிரெஞ்சுப் பாண் - இரண்டாம் இடத்தில் Strasbourg..!!

14 ஐப்பசி 2024 திங்கள் 08:43 | பார்வைகள் : 2658


பிரெஞ்சுப் பாண் (baguette) பிரெஞ்சு நகரங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நகரங்களில் Strasbourg இரண்டாவது இடத்தில் உள்ளது.

அங்கு சராசரியாக ஒரு பாண் €1.19 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. அதன் பின்னர் Bordeaux நகரில் இந்த பிரெஞ்சுப் பாண் சராசரியாக €1.12 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது Marseille நகரம். அங்கு சராசரியாக பாண் ஒன்று €0.97 சதத்துக்கு விற்பனையாகிறது. 

2001 ஆம் ஆண்டு பாணின் அதிகபட்ச விலை €0.66 சதம் இருந்தது. 2020-2022 ஆண்டுகளில் பாணின் விலை €0.93 சதங்களாக இருந்தது. 

தற்போது கடை வாடகை, மின்சாரக்கட்டணங்களை காரணம் காட்டி பாணின் விலை அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நகரம் எது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தலைநகர் பரிஸ். இங்கு ஒரு பிரெஞ்சுப் பாண் சராசரியாக €1.45 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்