நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
15 ஐப்பசி 2024 செவ்வாய் 03:20 | பார்வைகள் : 1521
சென்னையில் வடபழனி, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, அம்பேகர் சாலையில் உள்ள ஏரிக்கரை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் நள்ளிரவில் துணை முதல்வர் உதய நிதி ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவருக்கு மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர்.
துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது:
கடந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்