தாய்லாந்தில் இருந்து பரிசுக்கு கடத்தப்பட்ட கஞ்சா.. ஒருவர் கைது..!

15 ஐப்பசி 2024 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 10449
தாய்லாந்தில் இருந்து பரிசுக்கு கொண்டுவரப்பட்ட பெட்டி ஒன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து கொண்டுவரப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தாய்லாந்தில் தைக்கப்பட்ட உடைகளை பரிசுக்கு கொண்டுவரும் நிறுவனம் ஒன்றிம் பெட்டிகளுக்குள்ளேயே இந்த கஞ்சா பொதிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 115 கிலோ எடை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் இருந்து Tremblay-en-France (Seine-Saint-Denis) நகரில் உள்ள சேமிப்பகத்துக்கு இந்த பெட்டி வந்ததாகவும், அதனை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் ஒன்றை Porte de Montreuil பகுதியில் வைத்து மறித்து சோதனையிடப்பட்டதாகவும், 40 வயதுடைய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1