Paristamil Navigation Paristamil advert login

■ மழை வெள்ளம் - 4 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' - 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

■ மழை வெள்ளம் - 4 மாவட்டங்களுக்கு 'சிவப்பு'  - 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

17 ஐப்பசி 2024 வியாழன் 10:30 | பார்வைகள் : 6985


சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஒக்டோபர் 17, வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் நாட்டின் 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு Ardèche, Loire, Haute-Loire மற்றும் Rhône மாவட்டங்களுக்கு 'சிவப்பு' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பிரான்சின் அனைத்து தெற்கு மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்யும் எனவும், வீதி போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்படும் எனவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்