Paristamil Navigation Paristamil advert login

பிரியங்காவுக்கு எதிராக களமிறங்கிய சத்யன் மோகெரி; யார் இவர் தெரியுமா?

பிரியங்காவுக்கு எதிராக களமிறங்கிய சத்யன் மோகெரி; யார் இவர் தெரியுமா?

18 ஐப்பசி 2024 வெள்ளி 05:05 | பார்வைகள் : 163


வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து மூத்த தலைவர் சத்யன் மோகெரியை வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

காலியாக உள்ள லோக்சபா தொகுதியான வயநாடு மற்றும் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வந்த உடனே காங்கிரஸ் கட்சியினர் தங்களின் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவை எதிர்த்து யாரை களமிறக்குவது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தன.


ராகுல் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிட்டார். இந்த முறை போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முடிவில், அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகெரி வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சத்யன் மோகெரி இதுக்கு முன்பாக, 1987-2001ம் ஆண்டு நடபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு வயநாடு தொகுதியில் போட்டியிட்டு, 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், '2014ல் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரசுக்கு எதிராக எங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்தோம். அதே உற்சாகத்துடன் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுவேன். இங்கு வேண்டுமானால் ராகுல் தோல்வியடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், வட இந்தியாவில் தோல்வியடைந்ததால் தான் இங்கு வந்து போட்டியிட்டார். கருணாகரனே இங்கு தோல்வியடைந்துள்ளார். அதே நிலைமை தான் பிரியங்காவுக்கும்,' எனக் கூறினார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பா.ஜ., இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்