Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் - ஸ்பெயின் சுங்கவரித்துறையினர் இணைந்து மீட்ட 4 தொன் கொக்கைன்!

பிரான்ஸ் - ஸ்பெயின் சுங்கவரித்துறையினர் இணைந்து மீட்ட 4 தொன் கொக்கைன்!

18 ஐப்பசி 2024 வெள்ளி 09:12 | பார்வைகள் : 9092


கனரி தீவுக்கூட்டம் (îles Canaries) எனச் சொல்லப்படுகிற ஸ்பெயினுக்குச் சொந்தமான தீவுக்கூட்டங்களில் இருந்து 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் சுங்கவரித்துறையினர் இணைந்து மேற்கொண்டிருந்த நடவடிக்கையில் இந்த மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தமாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு போதைப்பொருள் விநிநோகம் செய்ய நீண்ட மாதங்களாக இந்த ‘பாதை’ பயன்படுத்தப்பட்டதாகவும், இங்கிருந்தே பிரான்சுக்குள்ளும் போதைப்பொருள் நுழைவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 தொன் கொக்கைன் 70 மீற்றர் நீளமுடைய கார்கோ கப்பல் ஒன்றில் பதுக்கப்பட்டிருந்ததாகவும், 589 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடலில் இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்