இஸ்ரேலின் தீவிர தாக்குதல் - 21 பெண்கள் உட்பட 33 பேர் பலி

19 ஐப்பசி 2024 சனி 10:22 | பார்வைகள் : 4598
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது 18 ஆம் திகதி மாலை இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளதுடன் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1