Manche மாவட்டத்தில் நாளை - புயல் எச்சரிக்கை!

19 ஐப்பசி 2024 சனி 17:15 | பார்வைகள் : 9541
பிரான்சில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை ஓரளவு சீரடைந்துள்ளது. நாளை ஒக்டோபர் 20, ஞாயிற்றுக்கிழமை Manche மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு மணிக்கு 75 கி.மீ வேகம் வரை புயல் வீசலாம் எனவும், அங்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்படாது எனவும் Météo France அறிவித்துள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் நாட்டின் பல பகுதிகள் சீரற்ற காலநிலையில் சிக்கித் தவித்திருந்தது. வெள்ளம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. பரிசில் மரம் முறிந்து மகிழுந்து மீது விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1