Paristamil Navigation Paristamil advert login

 நாடளாவிய ரீதியில் இருளில் மூழ்கிய கியூபா...?

 நாடளாவிய ரீதியில் இருளில் மூழ்கிய கியூபா...?

19 ஐப்பசி 2024 சனி 17:49 | பார்வைகள் : 5415


கியூபாவில் நாடளாவிய ரீதியில்  மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கியூபாவின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்று செயலிழந்ததையடுத்து மின்சாரத்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க பாடசாலைகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூடுமாறு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்