Paristamil Navigation Paristamil advert login

மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!

மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 8049


கடந்த செவ்வாய்க்கிழமை பரிசில் மகிழுந்து மோதி கொல்லப்பட்ட Paul எனும் மிதிவண்டி சாரதிக்கு, நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகவுகள் இடம்பெற்றிருந்தன.

Place de la République பகுதியில் நேற்று மாலை ஒன்றுகூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அஞ்சலி நிகழ்வுடன், மலர்வளையங்கள் வைத்தும், மெழுகு திரிகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு நகரமுதல்கள், துணை முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.

அதேவேளை, இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் வைத்து மாலை 5.45 மணி அளவில் Paul Varry என்பவர் SUV மகிழுந்து ஒன்று மோதி கொல்லப்பட்டிருந்தார். 45 வயதுடைய வாகன சாரதி பழிவாங்கும் நோக்கோடு அவர் மீது மகிழுந்தினால் மோதியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நாளை ஒக்டோபர் 21, திங்கட்கிழமை மிதிவண்டி சாரதி சங்கத்தினருடன், பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சர் François Durovray சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள உள்ளார்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்