Paristamil Navigation Paristamil advert login

காசா வைத்தியசாலை மீது  தாக்குதல் - சுகாதார அமைச்சு  குற்றச்சாட்டு

காசா வைத்தியசாலை மீது  தாக்குதல் - சுகாதார அமைச்சு  குற்றச்சாட்டு

20 ஐப்பசி 2024 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 3464


காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை  மீது  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலானது மனிதாபிமானமற்றவை என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேலிய விமானத்தாக்குதலினால் காசா முழுவதும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் காசாவின் வடக்கு பகுதியில் மகாசி இடம்பெயர்ந்தோர் முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்