வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?

20 ஐப்பசி 2024 ஞாயிறு 11:48 | பார்வைகள் : 3286
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியதாகவும் இதனை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.