Périphérique : காவல்துறையினரின் சிறப்பு நடவடிக்கையில் 4,500 கிலோ பொருட்கள் பறிமுதல்!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 13:34 | பார்வைகள் : 9094
சுற்றுவட்ட வீதி என சொல்லப்பட்டும் Périphérique வீதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றில் 4,500 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாத பொருட்கள், போதைப்பொருட்கள், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், ஈஃபிள் கோபுரத்தின் மினியேச்சர், பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட உடைகள், சப்பாத்துக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுவட்ட வீதியின் Porte de Montmartre பகுதியில் உள்ள 500 பேர் வரை வெளியேறப்பட்டு அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. 30 சிறிய சிறிய இடங்களில் சோதனையிடப்பட்டது. 28 பேருக்கு குற்றப்பணம அறவிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கை நேற்று ஒக்டோபர் 19, சனிக்கிழமை காலை இடம்பெற்றிருந்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1